இந்த
ஆண்டு நடக்கும், 'நீட்' தேர்வை, 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் எழுதலாம்'
என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'பிளஸ் 2க்குப் பின், மருத்துவப்
படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்
தேர்வை, 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்' என,
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
சி.பி.எஸ்.இ., நிர்ணயித்த வயது வரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நடப்பு, 2017ல் நடக்கும் நீட் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம். தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை, அடுத்த ஆண்டு முதல் நிர்ணயித்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஏப்., 5 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...