பணியில் உள்ள பல்கலை மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் மதம், ஜாதி, ஆதார் எண்,
போன் எண் ஆகிய தகவல்களை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திரட்டி
வருகிறது.
இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு கூடுதல் செயலாளர் ஆர்.சுப்ரமணியன் கூறியதாவது:
பல்கலை மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை அளிக்கப்படுகிறது.
ஆனால், சில பல்கலை மற்றும் கல்லூரிகளில் போலி கணக்கு காட்டப்படுகிறது.
இப்பிரச்னையை தீர்க்க நாடு முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில்
ஆசிரியர்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 15 லட்சம்
பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில், 60 சதவீதம் பேரிடம்
அவர்களின் மதம், ஜாதி, ஆதார் எண், போன் எண் ஆகிய தகவல்கள் திரட்டபட்டுள்ளன.
மீதியுள்ள ஆசிரியர்களிடம் அத்தகவலை பெற, ஒரு மாத அவகாசம்
அளிக்கப்படுகிறது. இத் தகவல்களை கொண்டு, gurujan.gov.in என்ற இணைய தளம்
ஏற்படுத்தப்படும். ஆதார் எண் மூலம் போலி ஆசிரியர்களை எளிதாக களையெடுக்க
முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...