பள்ளிகளில், கட்டண உயர்வு குறித்து 'Localcircles.com ஆய்வு மேற்கொண்டனர்.
மொத்தம் 9,000 பெற்றோர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு
கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
அதில் 54 சதவிகிதம் பேர் தங்களது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் 11 முதல் 20
சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 15 சதவிகிதம் பேர், 20
சதவிகிதத்துக்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 31
சதவிகிதம் பேர் பள்ளிக் கட்டணம் 10 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஹரியானா, ஆந்திரா, கேரளா, மேற்குவங்காளம், ராஜஸ்தான்,
உத்தராகண்ட், கோவா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 75 சதவிகிதம்
பெற்றோர்கள், பள்ளிக் கட்டணம் 10 சதவிகிதத்துக்கு மேல்
உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். டெல்லி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம்,
மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா 50 முதல் 75 சதவிகித
பெற்றோர்கள், பள்ளிக் கட்டணம் 10 சதவிகிதத்துக்கு மேல்
உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
குஜராத் மற்றும் பீகாரில் உள்ள பெற்றோர்கள்தான் பள்ளிக் கட்டணம் 10 சதவிகிதத்துக்கு குறைவாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...