அரசின், 'இ - -சேவை' மையங்களில், ஏப்., 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு
கேபிள் கார்ப்பரேஷன் மூலம், மாநிலம் முழுவதும், 303, 'இ - -சேவை' மையங்கள்
அனைத்து தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.
வருமானம், இருப்பிடம், ஜாதி, முதல் பட்டதாரி சான்றிதழ்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆதார் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகளை, கட்டணம் செலுத்தி, இங்கு மக்கள் பெறுகின்றனர்.பல்வேறு மாவட்டங்களில், 'எல்காட்' சேவை ஏப்., 1 முதல், கேபிள் கார்ப்பரேஷனுடன் இணைக்கப்பட்டு உள்ளது. 'இ- - சேவை' மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், ஏப்., 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக, கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.இதன்படி, 10 மற்றும் 20 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம், 5 ரூபாய் வரையும், 30 ரூபாய் முதல், 50 ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு, 10 ரூபாய் வரையும் உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 100 ரூபாய் வசூலிக்கப்பட்ட சேவைக்கு, 120 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...