Home »
» தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..
சென்னையில்
நேற்று இந்தாண்டில் அதிகபட்சமாக 106 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.
மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு
மையம் தெரிவித்திருக்கிறது.
|
. |
அக்னி
நட்சத்திரம் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தற்போதே
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக
தமிழகத்தில் வேலூர் மற்றும் திருத்தணியில் 109 டிகிரி வெப்பம் பதிவானது.
இதே போல், கரூரில் 108 டிகிரி பாரன் ஹீட் பதிவாகியுள்ளது. சென்னை
மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன் ஹீட்டும் நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரி
பாரன் ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான
காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு
மாருதா என இலங்கை நாடு பெயரிட்டுள்ளது. இது நேற்று மியான்மர் கடலோரப்
பகுதியிலிருந்து 240 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. அது இன்று காலை
கரையை கடந்தது. இந்த புயல், தமிழக பகுதியில் இருந்த ஈரப்பதத்தை ஈர்த்துச்
சென்றுவிட்டதால், இங்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில்
மாருதா புயலின் தாக்கத்தால், இந்த ஆண்டு முதல் முறையாக சென்னையில் நேற்று
106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி
நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு
இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும்
வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் தமிழகத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது.
குறிப்பாக நேற்று ராஜஸ்தானி 114 டிகிரி பதிவாகி உள்ளது.
இன்று
சென்னையில் 103 டிகிரி வெப்பம் பதிவாகியது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
உள்ளது. கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2வது மாதமாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில்
6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்
அடிப்படையில் இத்தகவலை அமெரிக்க வானவியல் ஆராய்ச்சி மையமான நாசா
வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்த
நிலையில் அதற்கு பூஜ்யம் புள்ளி ஒன்று ஐந்து டிகிரி வெப்பம் குறைவாக கடந்த
மார்ச் மாதம் பதிவாகியிருந்ததாக நாசா கூறியுள்ளது.
|
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...