ரேஷன்
கடைகளில் வழங்கிய, 17 லட்சம் குடும்ப தலைவர்களின், ஆதார் கார்டுகளில்
புகைப்படம் சரியாக இல்லாததால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதில்
திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் விபரத்தை வாங்கியது. அவை, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம், 'ஸ்கேன்' செய்து பதிவேற்றப்பட்டது.
தெளிவற்ற புகைப்படம் : அதில் உள்ள பெயர், புகைப்படம், முகவரி அடிப்படையில், 'ஸ்மார்ட் கார்டு' அச்சிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதார் கார்டுகளில், 17 லட்சம் குடும்ப தலைவர்களின், புகைப்படம் தெளிவின்றி, மோசமாக உள்ளது.
17 லட்சம் கார்டுகள் : இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் கார்டில் உள்ள, 'கியூஆர்' ரகசிய குறியீட்டை, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்ததும், அந்த விபரங்கள் அப்படியே, உணவு துறை, 'சர்வருக்கு' வந்தன. ஆதார் விபரம் தந்த, 1.29 கோடி ரேஷன் கார்டுகளில், 17 லட்சம் கார்டுகளில், குடும்ப தலைவர்களின் புகைப்படம் தெளிவாக இல்லை; மூன்று லட்சம் கார்டுகளில் புகைப்படமே இல்லை.
ரேஷன் கடைக்கு அழைப்பு : அப்படியே, ஸ்மார்ட் கார்டு கொடுத்தால், விமர்சனங்கள் எழும். எனவே, மொபைல் போன் எண்கள் மூலம், அவர்களை தொடர்பு கொண்டு, நல்ல புகைப்
படத்துடன், ரேஷன் கடைக்கு வர அழைப்பு விடுக்கப்படும். அங்கு, அந்த படத்தை, 'மொபைல் ஆப்' மூலம் பதிவேற்றம் செய்து, 'ஸ்மார்ட் கார்டு' அச்சிடப்படும். ஜூன் மாதத்துக்குள், அனைவருக்கும், ஸ்மார்ட் கார்டு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...