வங்கிகள் உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும், 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் வளாக நேர்காணல் மூலம் ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
*சென்னை ஐகோர்ட் உத்தரவு*
சென்னை உயர்நீதிமன்றத்தில், 2014ம் ஆண்டில் ஒரு மனு தாக்கல்
செய்யப்பட்டது. முன்னணி கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பொதுத்துறைகள் வளாக நேர்காணல் நடத்தி, அதன்மூலம் தேர்வு செய்வதை நிறுத்த வேண்டும்.
செய்யப்பட்டது. முன்னணி கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பொதுத்துறைகள் வளாக நேர்காணல் நடத்தி, அதன்மூலம் தேர்வு செய்வதை நிறுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கையால் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, வளாக நேர்காணல் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. எனினும், 2015 செப்.,7 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அந்த தடையை விலக்கி உத்தரவிட்டது.
' இந்த நடவடிக்கை காலத்திற்கு ஏற்ற ஒன்று. சிறந்தவர்களை தேர்வு செய்வதற்கான முயற்சி இல்லாவிடில், திறமையானவர்களை தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் வேலைக்கு எடுத்து விடுவர்' என, உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இதன் அடிப்படையில், வங்கிகள் உள்பட பொதுத்துறை நிறுவனங்களுக்கு வளாக நேர்காணல் மூலம் ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.
*சட்ட அமைச்கம் விளக்கம்*
இந்த சூழ்நிலையில், மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்ட விவகார பிரிவு,' சென்னை உயர்நீதிமன்றத்தின் 2015 செப்., 7 ம் தேதி உத்தரவின் பேரில், வங்கிகள் உள்பட பொதுத்துறை நிறுவனங்களுக்கு வளாக நேர்காணல் மூலம் ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறை, அரசியல் சட்டத்திற்கு முரணானது என கேள்வி எழுப்ப வாய்ப்பு உள்ளது.
2013ம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. வளாக நேர்காணல் நடத்துவது பிற மாணவர்களின் வாய்ப்பை தட்டி பறிக்கிறது என்பது மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் சாரம்சம். சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவு அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்பது அரசியல் சட்டத்தின் 141வது பிரிவு கூறுகிறது' என, கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிகள் உள்பட பொதுத்துறை நிறுவனங்களுக்கு வளாக நேர்காணல் நடப்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...