இந்திய வரைபடம் குறித்த புதிய புகைபடத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில் இரவில் மின்விளக்கில் இந்தியாவின் வரைபடம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளது.இதன் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா பல்வேறு நாடுகளில் காலநிலை மற்றம் பருவ நிலை மாற்றம்,இயற்கை பேரிடர் குறித்த தகவல்களை பெற 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக வரைபடத்தினை புகைப்படங்களாக எடுத்து கடந்த 25 வருடஙகளாக வெளியிடுகிறது. இந்நிலையில் கடந்த 2012 முதல் 2016-ம் ஆண்டு கால இடைவெளியில் உலக வரைபட அமைப்பை புகைப்படங்களாக எடுத்தது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதில் இரவில் இந்தியாவின் வரைபட புகைப்படத்தில் காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை இந்தியா மின் விளக்கில் மின்னிடும் காட்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நகரங்களின் வளர்ச்சியும், மனித வாழ்விடமும் அதிகரித்து வருவதையும் காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...