உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அனைத்து பள்ளிகளிலும், யோகா பாடத்தை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.
உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்ய நாத் முதல்வராக உள்ளார். இவர்,
முதல்வராக பதவியேற்றது முதல், சட்டவிரோத மாட்டி றைச்சி கூடங்களுக்கு தடை,
பெண்களை கிண்டல் செய்யும்
இளைஞர்களை தண்டித்தல் உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உ.பி., மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:
கல்வித்துறை அதிகாரிகளுடனான கூட்டத்தில்,
முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது, உ.பி., முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், யோகாவையும், சுய பாதுகாப்பு கலையையும் கட்டாய பாடமாக்கும்படி, முதல்வர் உத்தரவிட்டார்.
அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியாக பயிற்சி மையங் கள் துவங்கினாலும், பள்ளிகளில் தேர்வுகளின் போது, அதிகளவில், மாணவர்கள், 'காப்பி' அடித்து எழுதும் சம்பவங்கள் நடந்தாலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில், அதிகமாக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், வழிகாட்டு விதிகள் வகுக்க வும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அனைத்து பல்கலைகளிலும், ஒரே மாதிரியான பாடத் திட்டங் கள் வகுக்கப்பட வேண்டும் என்றும், முதல்வர் வலியுறுத்தினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விவசாய கடன் தள்ளுபடி
உ.பி., முதல்வர் ஆதித்யநாத் தலைமையில், நேற்று, முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள, 2.15 கோடி, சிறு விவசாயிகள் வாங்கியிருந்த, 36 ஆயிரத்து, 356 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதென முடிவு செய்யப்பட்டது. மேலும்,மாநிலம் முழுவதும், 5,000 கோதுமை கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும், இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
உ.பி.,யில், சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.
அதை நிறைவேற்றும் வகையில், ஆதித்யநாத் தலைமையிலான அரசு, தன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் கடனை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...