ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களே செயல்திட்ட மாடல்களை தயாரித்து, கற்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 'செயல் திட்டவழிக் கற்றல்' திட்டத்தை தொடக்கக் கல்வித்துறை செயல்படுத்தி உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தாங்களே அறிவியல், கணித பாடங்களுக்குரிய செயல்திட்ட மாதிரிகளை தயாரித்து கற்க உள்ளனர். இதற்காக மாவட்டத்திற்கு 35 நடுநிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒரு பள்ளிக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் மாவட்டத்திற்கு 1.05 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம்
மாடல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொள்ளலாம். இதன்மூலம் மாணவர்களின் அறிவியல் சிந்தனை துாண்டப்பட்டு, படைப்பாற்றல் அதிகரிக்கும்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அறிவியல், கணித ஆர்வமுள்ள 10 மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொண்ட ஒரு குழு அமைத்து மாடல்கள் தயாரிக்கப்படும். கடைகளில் விற்கும் மாடல்களை வாங்கி பயன்படுத்தினால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாடல்கள் மூலம் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...