இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் முகப்பு விளக்குகள் இரவு
நேரத்தில் வாகனம் செலுத்துபருக்கு வழிகாட்டவும்,
எதிரே வரும் வாகனம்
சுதாரித்து கொள்வதற்கும், பகல் நேரத்தில் அவசரம்…, வழி விடுங்கள் என எதிர்
வாகன செலுத்துபவருக்கு ஒரு அறிவிப்பு செய்யவும் மட்டுமே தேவையானபோது
பொத்தானை செலுத்தி ஒளிரச்செய்வோம்.2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வெளிவரவிருக்கும் அனைத்து வாகனங்களும் தானாக ஒளிரும் முகப்பு விளக்குகளோடு வெளிவரவிருக்கிறது. இதுவரை தேவையானபோது மட்டுமே பயன்படுத்தும் விளக்கு on/ off பொத்தான்கள் இனி எந்த வாகனத்திலும் இருக்காது. வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் இனி வாகனத்தை ஆப் செய்யும் வரை விளக்கு எரிந்து கொண்டே தான் இருக்குமாம்.
லாஜிக்கே புரியலையே பாஸ் !
வளர்ந்த நாடுகள் பல இந்த யுக்தியை விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க பயன்படுத்துகிறதாம். அதுமட்டும் இல்லாமல் பனி மூட்டம், மழைக்கு காலம், புகை சூழ்ந்த இடங்களில் இவ்வொளிரும் விளக்குகள் விபத்து ஏற்படாமல் தவிர்க்க உதவுமாம். பின்னால் வரும் வண்டியை கண்ணாடி மூலம் விளக்குகளை கொண்டு இனங்கண்டு ஒதுங்கி வழிவிட இயலுமாம்.
Okay
ReplyDelete