Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கல்

    ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணையை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
 
   அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான, ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; முடிவுகள், மார்ச், 24ல் வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்குள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப, 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, வெளிப்படையான கலந்தாய்வு மூலம், 21 மாவட்டங்களில், 2,444 பேருக்கு, நேற்று முன்தினம், பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


மீதமுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, 1,678 பேருக்கு, நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆறு பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கி, இப்பணியை, முதல்வர் பழனிசாமி துவங்கினார்.அப்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன், இயக்குனர் கண்ணப்பன் உடனிருந்தனர்.




2 Comments:

  1. anybody to know about the lab assistants are eligible for vacation leave. Some of the school staff telling they are office staff so there is no leave.

    ReplyDelete
  2. U have appointment order

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive