தமிழக
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, அகில இந்திய தரவரிசையில், கடந்த ஆண்டை
விட, இரு இடங்கள் கீழிறங்கியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சகம், 2016 முதல், நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை
வெளியிட்டு வருகிறது. அதில், தமிழகத்தில் உள்ள பல தனியார் நிறுவனங்களை
பின்னுக்குத் தள்ளி, கால்நடை பல்கலை, 36-வது இடத்தை பிடித்தது.இம்முறை
வெளியான பட்டியலில், இரண்டு இடங்கள் கீழிறங்கி, தரவரிசையில், 38 வது
இடத்துக்கு சென்றுள்ளது. எனினும், வேளாண் தொடர்புடைய பல்கலைகளில்
சிறப்பிடம் பெற்றுள்ளது.
இது குறித்து, பல்கலை துணைவேந்தர் எஸ். திலகர் கூறியதாவது: நாட்டில் உள்ள கால்நடை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட தேசிய வேளாண் ஆய்வு பல்கலைகள் கீழ் இயங்கும், 72 கல்வி நிறுவனங்களில், ஒன்பது மட்டும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அதில், நான்காவது இடத்தை, நம் பல்கலை பிடித்திருப்பது சிறப்பு. கால்நடை பல்கலைகளில், தமிழக கால்நடை பல்கலை மட்டுமே இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...