புலவர் சுப்பு.லட்சுமணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
ஆசிரியர் தகுதித் தேர்வு, 2003ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது; 2010 முதல், பிற மாநிலங்களிலும், தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.பின், 2012ல் அடுத்த தேர்வு நடைபெற்றது.
அதன் பின், ஐந்து ஆண்டுகள் கழித்து, 2017 ஏப்ரல், 29, 30ல் நடைபெறும் என,
அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில், '2012க்கு பின் பணியில் சேர்ந்தோர்,
2016க்குள் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றால், பணி வாய்ப்பு உறுதி
செய்யப்படும்' என, தமிழக அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அரசே ஐந்து
ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்தாதது தவறு; இது, மத்திய
அரசின் அரசாணையை மீறிய செயல்!ஐந்தாண்டில், மூன்று முறை தேர்வு நடைபெற்று
இருந்தால், தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்தடுத்த தேர்வில் வெற்றி
பெற்றிருப்பர்; பணி நிரந்தரம் ஆகி இருக்கும். புதிய ஆசிரியர்களுக்கும் பணி
வாய்ப்பு கிடைத்து இருக்கும். இப்படி, அரசே ஆசிரியர்களை பழிவாங்குவது
நியாயமா?தமிழக அரசு, தன் தவறை உணர்ந்து, 2012லிருந்து, 2017 மார்ச் முடிய
பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம்.
தற்போது நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, புதிதாக பணி வழங்கலாம்.
வருங்காலத்தில் மத்திய அரசின் ஆணைப்படி, அவ்வப் பருவங்களில் தகுதித் தேர்வு நடைபெற வேண்டும்.வரும், ஏப்., 29, 30ல் நடைபெறும் தகுதித் தேர்வை ஓரிரு திங்கள் தள்ளி வைக்கலாம். ஐந்தாண்டு தள்ளியவர்களுக்கு, இரு திங்கள் பொறுக்க முடியாதா...ஏனெனில், 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முடிந்து விட்டது.
இனி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்ல வேண்டும்; ஏனைய ஆசிரியர்கள்,பள்ளித் தேர்வை நடத்தி, விடைத்தாள் திருத்த வேண்டும்.பின், தேர்வு முடிவு அறிவிக்க வேண்டும்.கோடை விடுமுறையில் தான், ஆசிரியர்களுக்கு படிக்க, தயாரிப்பு பணி செய்ய போதிய காலம் கிடைக்கும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் முடிய பள்ளி உண்டு. பள்ளி பணி பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.எனவே, அரசும், துறை அலுவலர்களும் ஆராய்ந்து, தகுதித் தேர்வை, ஜூன், ஜூலையில் வைக்க ஏற்பாடு செய்யலாம்!

A small correction, another TET was conducted in 2013 with surplussed of passed candidates by lowering the eligible mark from 90 to 82 for reservation categories
ReplyDelete