பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சத்துணவு மையங்களுக்கு,
பயறு வகைகள் வாங்க, நுகர்பொருள் வாணிபக் கழகம் அவசரம் காட்டுகிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சத்துணவு மையங்கள் உள்ளன. இவற்றில், வாரத்துக்கு ஒரு நாள், ஒரு மாணவருக்கு, தலா, 20 கிராம் கருப்பு கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, பயறு வகைகளை வாங்கி, சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்கிறது.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாணிபக் கழகம், 600 டன் கருப்பு கடலை; 500 டன் பச்சை பயறு வாங்க அவசரம் காட்டி வருகிறது.
இது குறித்து, வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பள்ளிகள் துவங்கும் சமயத்தில், பயறு வாங்கினால், சப்ளை செய்வதில் தாமதம் ஏற்படும். எனவே, தற்போது, ஐந்து கோடி ரூபாய்க்கு, இரு வகையான பயறு வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அதில், நிறுவனங்கள் பங்கேற்க, மே, 19 கடைசி நாள். அடுத்த மாத இறுதிக்குள் பயறு வாங்கப்பட்டு, ஜூனில் பள்ளி திறக்கும் முன் சப்ளை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...