வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயில் மற்றும் வெப்பக் காற்றால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
கடும் வெப்பத்தால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அது இலங்கைக்கும், அந்தமானுக்கும் இடையே நிலை கொண்டுள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அது விரைவில் தமிழகம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தமிழகத்தை நெருங்கினால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை வங்கதேசம் நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...