அதிகாரிகளின்
ஒரு தலைபட்சமான செயல்பாட்டால், ஆறு மாதங்களாக அலைக்கழிக்கப்பட்ட இரண்டு
ஆசிரியர்கள், நேற்று மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். ராமநாதபுரம்
மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில்
பணியாற்றிய, தாவரவியல் ஆசிரியர் சண்முகநாதன் மற்றும் வேதியியல் ஆசிரியர்
முகேந்திரன் ஆகியோர், செப்., - அக்., மாதங்களில், திடீரென இடமாற்றம்
செய்யப்பட்டனர்.
சில
மாணவியரை மிரட்டி, போலி புகார் பெற்று, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
எடுத்ததாக, தலைமை ஆசிரியர் பிரேமா மற்றும் முதன்மை கல்வி அதிகாரி
ஜெயக்கண்ணு மீது புகார் எழுந்தது. இது குறித்து, பள்ளிக்கல்வி மேல்நிலை
பொறுப்பு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, இயக்குனர் கண்ணப்பன் ஆகியோரிடம்,
ஆசிரியர்கள் முறையிட்டும் பலன் இல்லை. இதனால், மதுரை உயர் நீதிமன்ற
கிளையில், ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்; தங்கள் மீது பொய் புகார்
கூறப்பட்டுள்ளது என, ஆதாரத்துடன் நிரூபித்தனர். இதையடுத்து, இரு
ஆசிரியர்களின் இடமாறுதலையும், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்படி,
இரண்டு ஆசிரியர்களும், ஆறு மாத அவதிக்கு பின், நேற்று பணியில் சேர்ந்தனர்.
கருவேல மரத்தை அகற்றாத எச்.எம்., : உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தலைமை ஆசிரியை பிரேமா, பள்ளி அருகே, 2,400 சதுர அடி பரப்பில உள்ள, கருவேல மரத்தை அகற்ற வேண்டும்; அதை மாவட்ட நீதிபதி கண்காணிக்க வேண்டும். தவறினால், பள்ளிக் கல்வித் துறை, கருவேல மரங்களை அகற்றிவிட்டு, அதற்கான செலவை, தலைமை ஆசிரியை சம்பளத்தில் இருந்து பிடிக்க வேண்டும். அதையும் மீறினால், இணை இயக்குனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கருவேல மரத்தை அகற்றாமலே, தலைமை ஆசிரியையை, பள்ளிக்கல்வித் துறை பணியிலிருந்து விடுவித்துள்ளது. எனவே, இணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...