மதுரை,
மதுரை தொழிலாளர் இணை கமிஷனர் மண்டலத்தில் 9 ஓட்டுனர் பணியிடங்களுக்கு
எழுத்து தேர்வு ஏப்., 9ம் தேதி மதுரை, திருநெல்வேலி யில் நடக்கிறது.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் பிற மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு மதுரையில் ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, யு.சி., மேல்நிலைப் பள்ளி, சேதுபதி பள்ளியிலும், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தினருக்கு திருநெல்வேலி கதீட்ரல் மற்றும் மேரி சார்ஜென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்துடன் தேர்வில் பங்கேற்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...