50 ஆண்டுகளாக இயங்கும் அரசு
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கவுரவிக்க, கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை
படிப்படியாக குறைந்து வருகிறது. சில பள்ளிகள், அப்பகுதியினரின்
ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுகின்றன.
இதில், 5௦ ஆண்டுகள்
பழமையான பள்ளிகளும் உண்டு; இப்பள்ளிகளை கவுரவிக்க கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.இப்பள்ளிகளை தேர்வு செய்வதற்காக மாவட்டத் தொடக்கக் கல்வி
அலுவலர் மேற்பார்வையாளராகவும், தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்; உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்,
கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என, 12
உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...