எங்கள் பள்ளிகுளம் ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு இந்த கல்வியாண்டு ரொம்ப
சிறப்பாவே முடிஞ்சிருக்கு. இப்பதா குஜராத் போய்ட்டு DFC விருது
வாங்கிவந்தோம்.
இப்ப மாவட்ட கல்வித்துறை எங்கள் பள்ளிகுளம் நடுநிலைப்பள்ளியை
விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த நடுநிலைப்பள்ளியாக தேர்ந்தெடுத்து 2016
ஆம் கல்வியாண்டிற்கான காமராசர் விருதுடன் ரூ 50,000 நிதியையும் (பள்ளி
மேம்பாட்டிற்கு) வழங்கி எங்களின் இந்தனை வருட உழைப்பிற்கு,அரசு மூலம் முதல்
அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
எப்படி எங்க சந்தோஷத்த வெளிபடுத்துவதுனே தெரியல.பல்லாண்டு
பயிர்செய்யும் விவசாயி, நல்ல மகசூல் எடுக்கும் போது கிடைக்கும் மனநிறைவுதா
எங்களுக்கும் இருக்கு.
இந்த விருது நீண்டதூர ஓட்டத்தில், இடையிடையே கொடுக்கப்படும் ஊக்க பானம் போல எங்கள ரொம்ப ஊக்கப்படுத்தியிருக்கு.
இந்த விருதுக்கு காரணமான எங்கள் பள்ளிகுளம் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்குமே இந்த விருதை சமர்பிக்கிறோம்.
இது ஒரு தொடக்கந்தா... எங்கள் கனவெல்லாம் மாநில அளவில் ஒரு சிறந்த மாதிரி பள்ளிமட்டுமல்ல, மாதிரி கிராமமும் தான்...
*நன்றி...
மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர்-விழுப்புரம்.
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் - வல்லம்.
வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் வல்லம். தோழர்.திரு.மோ.கணேசன்புதியதலைமுறை தோழி.திருமதி.ரமணிபிரபா தேவி - தி தமிழ் இந்துநாளிதழ்.
நிதி உதவி செய்துவரும் கொடைவுள்ளங்கள், எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் முகநூல் நட்புக்கள் அனைவருக்கும் எங்கள் கிராமத்தின் சார்பாக கோடானகோடி நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

கி.தமிழரசன்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பள்ளிகுளம்.
வல்லம் ஒன்றியம்.
விழுப்புரம் மாவட்டம்.
9786899951
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பள்ளிகுளம்.
வல்லம் ஒன்றியம்.
விழுப்புரம் மாவட்டம்.
9786899951
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...