வெயில் தாக்கம் காரணமாக, 'அம்மா மினரல் வாட்டர்' பாட்டில்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மூன்று மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுவதால், பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
விற்பனை ஊழியர்கள் கூறியதாவது: முக்கிய நகரங்களில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில், இரண்டு ஸ்டால்கள் மட்டுமே செயல்படுகின்றன. பல ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில், தேவைக்கு ஏற்ப பாட்டில்கள் வருவது இல்லை. சாலையோர உணவகங்கள், தேவையின்றி செயல்படும் ஸ்டால்களுக்கு அனுப்பும் பாட்டில்களை, பஸ் ஸ்டாண்ட் ஸ்டால்களுக்கு அனுப்புவதன் மூலம், பயணிகளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் கூறியதாவது: மார்ச் மாதத்தை விட, ஏப்ரல் மாதத்தில், பாட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டோம். இருந்த போதிலும், பயணிகள் மத்தியில் தேவை அதிகரித்து விட்டதால், தட்டுப்பாடு நிலவுகிறது. கூடுதல் பாட்டில்கள் அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
'சும்மா' இருக்கும் ஊழியர்கள் : குடிநீர் விற்பனை ஸ்டால் ஒன்றுக்கு, இரண்டு ஊழியர் என்ற வகையில், 648 பேர் பணியில் உள்ளனர். இப்பணிகளை, அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களே மேற்கொண்டு வந்தனர். பாட்டில்களில் ஏற்படும் சேதத்தை ஊழியர்கள் தலையில், அதிகாரிகள் சுமத்தியதால், பலர் இந்த பணியில் இருந்து வெளியேறி விட்டனர். தற்போதைய நிலையில், வயதான டிரைவர், கண்டக்டர்களே பணியில் உள்ளனர். மூன்று மணி நேரத்தில், வாட்டர் பாட்டில்கள் விற்று தீர்ந்து விடுவதால், இந்த ஊழியர்கள், 'சும்மா' இருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...