Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘36-24-36’ தான் பெண்ணின் அழகான உடல் வடிவமைப்பு சி.பி.எஸ்.இ. பாட புத்தகத்தால் சர்ச்சை

      டாக்டர் வி.கே.சர்மா எழுதிய சுகாதாரம் மற்றும் உடற்கல்வி (ஹெல்த் அண்ட் பிசிகல் எஜூகேசன்) என்ற புத்தகம் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
        புத்தகத்தை டெல்லியை சேர்ந்த நியூ சரஸ்வதி ஹவுஸ் அச்சகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தைதான் சி.பி.எஸ்.இ.யின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில், உடல்கூறும், விளையாட்டும் என்ற அத்தியாயத்தில் பெண்களின் உடல் வடிவமைப்பு பற்றி குறிப்பிடுகையில் ‘36-24-36‘ கொண்டவர்கள்தான் அழகிய உடல் வடிவம் கொண்டவர்கள் ஆவர்.
அதனால்தான் உலக அழகிப்போட்டி மற்றும் பிரபஞ்ச அழகிப் போட்டிகளுக்கு இந்த வடிவமைப்பிலான பெண்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த தகவல்கள் அடங்கிய புத்தகத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக விமர்சனங்களுடன் பரவி வருகிறது. பல்வேறு சமூக அமைப்புகளும், ஆர்வலர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். உடனடியாக இந்த பாடப் பகுதியை புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறாது. இதுபற்றி சி.பி.எஸ்.இ. விடுத்த அறிக்கையில், தனிப்பட்ட பதிப்பகத்தினர் வெளியிடும் எந்த புத்தகத்தையும் நாங்கள் சிபாரிசு செய்வது இல்லை. சாதி, சமூகம், மதம், பாலினம் பற்றி சர்ச்சைக்குரிய எந்த கருத்தும் பாடப்புத்தகத்தில் இடம்பெறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே இதுபோன்ற புத்தகங்களை பாட திட்டத்தில் சேர்க்கும்போது, பள்ளிக்கூடங்கள்தான் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்று விளக்கம் அளித்து இருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive