சிறப்பம்சமாக 10ஜிபி வரம்பிலிருந்து தவறும் டேட்டாவானது அடுத்த நாளின் கணக்கில் இணையும்.
இந்திய அரசிற்குச் சொந்தமான தொலைத் தொடர்பு ஆப்ரேட்டரான பிஎஸ்என்எல் அதன் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ரூ.249/- மதிப்பிலான இந்த பிராட்பேண்ட் திட்டம் மூலம் பயனர்கள் மாதத்திற்கு 300ஜிபி அளவிலான தரவு வரை பெறலாம். மேலும் இந்த புதிய திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் பயனர்கள் இரவு நேரத்தில் பகுதி இலவச அழைப்புகளையும் பெறலாம்.
பிஎஸ்என்எல் நிர்வாகி ஒருவர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த புதிய ரூ.249/- பிராட்பேண்ட் திட்டமானது அடுத்த ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் இருக்கும், பின்னர் அது ரூ.499/-க்கு கிடைக்கும்.
வேகம்
இந்த புதிய ரூ.249/- திட்டத்தின் கீழ் நுகர்வோர்கள் தினசரி 10ஜிபி அளவிலான தரவு வரை பெறுவர். 10ஜிபி தீரும் வரை 2எம்பிபிஎஸ் வேகமும் தீர்ந்த பின்னர் 1எம்பிபிஎஸ் வேகமும் வழங்கும்.
அடுத்த நாளின் கணக்கில்
மேலும் இந்த புதிய ரூ.249 திட்டமானது ஜம்மு காஷ்மீர் மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதிகள் தவிர்த்து பிற அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும். சிறப்பம்சமாக 10ஜிபி வரம்பிலிருந்து தவறும் டேட்டாவானது அடுத்த நாளின் கணக்கில் இணையும்.
இலவச அழைப்புகளும்
மேலும் கூடுதலாக ரூ.249/- திட்டத்தின் கீழ் காலை 7 மணி முதல் இரவு 9 வரை இடையிலான வரம்பற்ற இலவச அழைப்புகளும் கிடைக்கும். பிஎஸ்என்எல் நிர்வாகி அளித்த தகவலின் கீழ் வரம்பற்ற இலவச அழைப்பு அனைத்து ஞாயிற்றுக்கிழமை நீட்டிக்கப்படும் மற்றும் இந்தியா முழுக்க வேறு எந்த நெட்வொர்க் உடனான இலவச அழைப்புகளையும் வழங்கும் என்றும் அறியப்படுகிறது.
உறுதி
இந்த திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் அதன் பிராட்பேண்ட் திட்ட சந்தாதாரர்களிடம் இருந்து கூடுதலாக எந்த கட்டணங்களையும் பெறாது என்பதை உறுதி செய்துள்ளது. எனினும் ரூ.249/- என்ற பாதுகாப்பு வைப்பும் மற்றும் ஒரு மாதம் என்ற குறைந்தபட்ச வாடகை காலமும் கொண்டுள்ளது
நேரடி போட்டி
இந்த புதிய பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டமானது வெளிப்படையாகவே ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட பிற தொலைதொடர்பு இயக்குனர்களுக்கு நேரடி போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிஎஸ்என்எல் திட்டமானது மார்ச் வரை பயனர்களுக்கு கிடைக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...