Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாடு முழுவதும் 300 போலி நிறுவனங்களில் அமலாக்கத்துறை... சோதனை!

போலியான பெயர்களில் துவங்கப் பட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக, நாடு முழுவதும், சென்னை உட்பட,
100க்கும் மேற் பட்ட இடங்களில், நேற்று, அமலாக்கத் துறை அதிகாரிகள்அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதால்,முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
போலி பெயர்களில் துவங்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக,
அமலாக்கத்துறை
நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவ தும், 16 மாநிலங்களில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், 300க்கும் மேற்பட்ட போலிநிறு வனங்களில், அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை, டில்லி, கோல்கட்டா, சண்டிகர், பாட்னா, ராஞ்சி, ஆமதாபாத், புவனேஸ்வர், பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் இந்த சோதனைகள் நடந்தன. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டம், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் நடந்த இந்த சோதனைகளின்போது, சட்டவிரோத
பணப் பரிமாற்றம்,அன்னியசெலாவணி மோசடி பரிவர்த்தனைகள் சோதனையிடப்பட்டன.

இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகவும், இதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளதாக வும் கூறப்படுகிறது. இதுகுறித்து,அமலாக்க துறை வட்டாரங்கள் கூறுகையில், 'போலி நிறு வனங்கள் மூலம், 3,900 கோடி ரூபாய் அளவு க்கு, முறைகேடாக பரிவர்த்தனை நடந்துள்ள தாக, இந்த சோதனை மூலம் தெரியவந்துள் ளது' என்றன.

பிரதமர் அலுவலகம் சமீபத்தில், அமலாக்கத் துறைக்கென சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கி, அதற்கென, பல்வேறு அதிகாரங் களை வழங்கி இருந்தது. அதையடுத்து, போலி நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

கடந்த வாரம், அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளை அடுத்து, போலி நிறு வனங்களின் பெயர்களில் இருந்த, கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டன.

கள்ள ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு பின், பினாமி பெயர்களில் சொத்து சேர்த்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக, பிரதமர் மோடி, ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில்8இடங்கள்: தமிழகத்தின்,
சென்னையில், 12 இடங்களில், எட்டு நிறுவனங் களில் நேற்று அதிரடி சோதனை நடந்தது. அப்போது, அந்த நிறுவனங்கள் கறுப்பு பண பதுக்கலில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மோசடி பணம்

'ஷெல் கம்பெனி' எனப்படும் போலி நிறுவனங் கள், குறைந்த முதலீட்டுடன் அமைக்கப்படு கின்றன. பின், இந்த நிறுவனங்களின் கணக்கு களில் பிரமிக்கத்தக்க வகையில் முதலீடுகள் குவிக்கப்படும். அவற்றின் பெயரில், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படாத நிறுவனங்க ளில், ஏராளமான நிதி முதலீடு செய்யப்படும். இந்த வகையில், கணக்கில் வராத மோசடி பணம், பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

கலக்கம்

தேசியவாத காங்., கட்சித் தலைவர் சக்கன் புஜ்பல், ஆந்திராவின், ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, உட்பட, பலருக்குச் சொந்த மான இடங்களில், நேற்று, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை யிட்டனர்.

உ.பி.,யில், தேசிய ஊரக சுகாதாரத் திட்ட ஊழலில் தொடர்புடைய பலரது இடங்க ளிலும், சோதனைகள் நடந்ததாக தெரிகிறது. சோதனை நடத்தப்பட்ட இடங்களுக்கு தொடர்புடைய பல பெரும் தலைகள், கலக்கம் அடைந்திருப்ப தாக கூறப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive