பிளஸ்
2 தேர்வில், இறுதி நாளான நேற்று, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு தாவரவியல்
தேர்வு, 150 மதிப்பெண்களுக்கு நடந்தது. கணிதம், அறிவியல் இணைந்த பிரிவு
மாணவர்களுக்கு, உயிரியல் தேர்வு நடந்தது. இதில், தாவரவியல் மற்றும்
விலங்கியல் பாடங்களுக்கு, தலா, 75 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. இரண்டு
பிரிவினருக்கும், தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது; விலங்கியல் கடினமாக
இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
சென்னை,
எம்.சி.டி.எம்., மேல்நிலை பள்ளி தாவரவியல் ஆசிரியர் சவுந்திர பாண்டியன்
கூறுகை யில், ''தாவரவியல் தேர்வு, எளிமையாக இருந்தது. ''பெரும்பாலும்,
பாடத்தின் பின்பக்கத்திலுள்ள கேள்விகளே இடம் பெற்றன. உயிரியல் தேர்வில்,
தாவரவியல் தாள், தேர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் இருந்தது. ஒரு
மதிப்பெண் கேள்விகள் தரமாக இருந்தன,'' என கூறினார். அதே நேரம், உயிரி -
விலங்கியல் தேர்வில், பெரும்பாலான மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்குமா
என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து, சென்னை எம்.சி.டி.எம்., மேல்நிலை பள்ளி விலங்கியல் ஆசிரியர் இளங்கோவன் கூறியதாவது: சில கேள்விகள், 'கிரியேட்டிவ்' வகையில் இடம் பெற்றன. ஐந்து மதிப்பெண் கட்டாய வினா, மாணவர்களை யோசிக்க வைத்தது. புத்தகத்தில் உள்ள, இரண்டு வினாக்களுக்கான விடைகளை இரண்டாக பிரித்து, அவற்றை, 10 மதிப்பெண் பிரிவில், தனித்தனி கேள்விகளாக, தலா, ஐந்து மதிப்பெண் தரும் வகையில், 36ம் எண்ணில் இடம் பெற்றது. கழிவு மேலாண்மை குறித்து, இடம் பெற்றுள்ள, இந்த இரு கேள்விகளையும் பல மாணவர்கள் எதிர்பார்க்கவில்லை. மூன்று மதிப்பெண் வினாக்களும், கடினமாக இருந்ததால், சென்டம் எடுப்போர் எண்ணிக்கை குறையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
குழப்பிய 2 கேள்விகள் : விலங்கியலில், 'ஏ' வகை வினாத்தாளில், ஒரு மதிப்பெண்ணுக்கான, எட்டாவது வினாவில், 'எந்த தடை சார்பு நோய் - ஜீன் திடீர் மாற்றத்தால் ஏற்படுகிறது' என, கேட்கப்பட்டிருந்தது. ஜீன் திடீர் மாற்றத்தால், எந்த நோய் ஏற்படுகிறது என, புத்தகத்தில் குறிப்புகள் இல்லை என, மாணவர்கள் கூறினர். அதே போல், 14வது வினாவில், பிறந்த குழந்தையின் உடல் எடையில், எத்தனை சதவீதம் நீர் இருக்கும் என, கேட்கப் பட்டுள்ளது. இதற்கு, 85 முதல், 90 சதவீதம் என்பது புத்தகத்தில் உள்ள சரியான விடை. ஆனால், விடைக்குறிப்பில், 85 முதல், 90 சதவீதம் என்ற விடையே இல்லை. எனவே, இந்த இரு கேள்விகளுக்கும், போனஸ் மதிப்பெண் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...