ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டு முதல்
ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சிகள் அனைத்தும் ஜுன் மாதம் முதல்
வாரத்திலேயே 5 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக
வழங்கப்படும். முதல் கட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 50% ஆசிரியர்களுக்கு நடைபெறும். மீதமுள்ள ஆசிரியர்களுக்கு
இரண்டாம் அல்லது மூன்றாம் பருவம் தொடக்கத்தில் இதே பயிற்சிகள் அந்தந்த
வட்டார வளமையத்தில் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் நாட்களில்
மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இப்பயிற்சியின் முற்னேற்பாடாக, மே மூன்றாம் வாரத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் (மாவட்டத்திற்கு 10 ஆசிரியர் பயிற்றுனர்கள்) பயிற்சி சென்னையில் வைத்து நடைபெறும். மே இறுதி வாரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் வழங்கப்படும். 6 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அனைத்தும் RMSA வழியாக அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களின் உதவியுடன் நடைபெறும்.
பள்ளி வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வட்டார அளவிலான பயிற்சிகள் மாணவர்களின் கல்வித்தரத்தினை பாதிக்கும் என்பதனை உணர்ந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் வட்டார அளவிலான பயிற்சிகள் பருவ ஆரம்பத்திலேயே வழங்கப்படும். குறுவள மைய பயிற்சிகள் வழக்கம் போலவே நடைபெறும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...