பிளஸ் 2 உயிரியல் தேர்வில் தாவரவியல் பகுதி
எளிதாக, விலங்கியல் வினாக்கள் கஷ்டமாக இருந்ததால் சென்டம் பெறுவது சிரமம்,'
என, ஆசிரியை , மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:
விலங்கியல் கடினம் - நிதிஷ் பரத்வாஜ் (மாணவர், நோபிள் மெட்ரிக் .,மேல்நிலை பள்ளி, விருது நகர்): ஒரு மதிப்பெண் கேள்விகள் சுலபமாக இருந்தது. விலங்கியல் பாட பிரிவில் 3 மதிப்பெண்களுக்கான கேள்வி கடினமாக இருந்தது. 5,10 மதிப்பெண் கேள்விகள் சுலபமாக இருந்தது. தாவரவியல் பாட பிரிவில் அனைத்து கேள்விகளுமே சுலபமாக இருந்தது.
நுணுக்கமான கேள்விகள் - சி.ராஜலட்சுமி( மாணவி,ஜேசீஸ் மெட்ரிக்., மேல்நிலைபள்ளி, சிவகாசி): ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. விலங்கியலில் மட்டும் 3 மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தது. சிந்தித்து விடையளிப்பதாக இருந்தது. புத்தகத்தை ஒரு வரிவிடாமல் படித்திருந்ததால் 10 மதிப்பெண் வினாவிற்கு எளிதாக விடை எழுத முடிந்தது. கேள்விகளும் நுணுக்கமாக கேட்கப்பட்டிருந்ததால், பதிலை மட்டும் படித்து எழுதுபவர்களுக்கு கடினமாக இருந்திருக்கும்.
தாவரவியல் எளிமை - சாரதா (ஆசிரியை, ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகர்): தாவரவியல் வினாக்கள் எளிமையாக இருந்தன. விலங்கியலில் சென்டம் பெறுவது சிரமம். மூன்று மதிப்பெண் வினாக்களில் 18, 22, 26 கடினம். வினா உள்ள பாடங்களை தெளிவாக படித்திருந்தால் தான் விடையளிக்க முடியும். ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன, எதிர்பார்த்தது வந்தன. 10 மதிப்பெண் வினாவில் உடற்செயலியல் பாடத்தில் வந்த இரு
வினாக்களும் எளிது. இந்த பகுதி 36 வது
வினாவில் இருவினாக்களை சேர்த்து கேட்டிருந்ததால் அதிகம் எழுதவேண்டும்.
பொதுவாக சராசரி மாணவர்கள் மதிப்பெண் பெறுவது கஷ்டம் தான்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...