ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
2 நாட்கள் நடைபெறும் தேர் வில் தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணி யாற்ற வேண்டுமானால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். கேந்திரிய வித் யாலயா பள்ளிகள் உள்ளிட்ட சிபிஎஸ்இ
பள்ளிகளில் பணிபுரிய சிபிஎஸ்சி நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரி யர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற் றால்தான் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம்.
கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு தகுதித்தேர்வு (மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தகுதித்தேர்வு) நடத்தப்பட்ட நிலை யில், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தகுதித்தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. ஏற்கெனவே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தபடி ஏப்ரல் 29-ம் தேதி (சனிக்கிழமை) இடை நிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் (தாள்-1) மறுநாள் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் (தாள்-2) நடைபெற உள்ளன. முதல் நாளன்று 598 மையங்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேரும், 2-வது நாளில் 1,263 மையங்களில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும் தேர் வெழுதுகிறார்கள். இரு நாட் களுக்கு நடைபெறும் தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...