ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,)
நடத்துவது தொடர்பாக ஒன்பது மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
விருதுநகரில் ஏப்.,16ல் நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்
ஏப்.,29 மற்றும் 30ல் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடக்கின்றன.
லட்சக்கணக்கானோர் இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும்
நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு
செய்யும் பணிகள் தற்போது நடக்கின்றன.
இதுகுறித்து மதுரை,
திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி,
ராமநாதபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களின் முதன்மை மற்றும் மாவட்ட கல்வி
அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் விருதுநகரில் இணை இயக்குனர் குப்புசாமி
தலைமையில் நடக்கிறது.
அப்போது தேர்வு மையங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும்.
அப்போது தேர்வு மையங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...