ரேஷன் கார்டுகளில் 2009ற்கு பின் உள்தாள்
ஒட்டப்பட்டு வருகிறது. எட்டு ஆண்டுகள் இழுபறிக்கு பின், சென்னை தவிர்த்த
மற்ற பகுதிகளில், இன்று முதல், ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில், முதல்வர் பழனிசாமி
ஸ்மார்ட் கார்டு வழங்கி துவங்கி வைக்கிறார். ஒரு மாவட்டத்தில், தலா 50
ஆயிரம் என மாநிலம் முழுவதும் 15 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட
உள்ளன.
2016 ஜூலை நிலவரப்படி 2.04 கோடி ரேஷன் கார்டுகள் இருந்தன.ஒரு அரிசி கார்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக, 6,000 ரூபாயை, அரசு செலவு செய்கிறது. நேற்று வரை ரேஷன் கடைகளில் உள்ள 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்த கார்டுகளின் எண்ணிக்கை, 1.89 கோடி.இதையடுத்து போலி முகவரியில் வாங்கியிருந்த 15லட்சம் பேர் பதியவில்லை. எனவே, அரசுக்கு, அந்த கார்டுகள் மூலம் ஆண்டுக்கு, 900 கோடி ரூபாய் மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அலைய வேண்டாம்! : உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஆதார்' கார்டு பதிவு செய்த, அனைத்து குடும்பங்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இதற்காக அவர்கள் கடைக்கு அலைய வேண்டியதில்லை. கார்டு தயாரானதும் ரேஷனில் பதிவு செய்த அலைபேசி எண்ணுக்கு 'ஒன் டைம் பாஸ்வேர்டு' வரும். அதை காட்டி ஸ்மார்ட் கார்டு வாங்கலாம். எஸ்.எம்.எஸ்., வந்ததில் இருந்து ஏழு நாட்களுக்குள் செல்லலாம். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் ஆதார் பதிவு செய்து, மற்றவர்கள் பதியாமல் இருந்தால், அவர்கள் திங்கள் முதல் பதிவு செய்யலாம், என்றார்.
எத்தனை பேர்: ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்த கார்டுகள் எண்ணிக்கை, 1.89 கோடி. அதில், அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் பதிவு செய்தது, 1.26 கோடி கார்டுகள். 60 லட்சம் கார்டுதாரர்கள், குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவரின் ஆதாரை மட்டும் பதிவு செய்துள்ளனர். எனவே, இன்று முதல் படிப்படியாக, 1.50 கோடி பேருக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. ஒருவரின் ஆதார் மட்டும் பதிவு செய்தவர்கள், மற்ற உறுப்பினர்களின் ஆதார் பதிந்ததும், ரேஷன் கார்டு பெறலாம்.
ரகசிய குறியீடுகள்! ஸ்மார்ட் கார்டில், போலிகளை தடுக்க, ரூபாய் நோட்டில் இருப்பது போல், 'கில்ஆக்' என்ற நவீன ஓவியங்கள்; மிகச்சிறிய எழுத்தில் துறையின் பெயர்; புற ஊதாக்கதிர் மூலம் மட்டும் தெரியும், தமிழக அரசின் முத்திரை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...