Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1.25 Crore Smart Cards Soon will Issue - Education Minister

பெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.


எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மேற் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்டங்களி லும் (சென்னை நீங்கலாக) கடந்த 6, 7-ம் தேதி ஆகிய 2 நாட்கள் வழிகாட்டி முகாம்கள் நடத்தப்பட் டன. அந்த நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தினால், சென்னை மாவட் டத்தில் மட்டும் வழிகாட்டி முகாம் நடத்தப்படவில்லை.கல்வி வழிகாட்டி முகாம்இந்த நிலையில், சென்னையில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்களாக 10 இடங்களில் வழிகாட்டி முகாம்கள் நடைபெற்றன. முகாம் நடைபெற்ற இடங்களில் ஒன்றான சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங் கிலோ-இந்தியன் பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், நிதித்துறை அமைச் சர் டி.ஜெயக்குமார், பள்ளிக்கல் வித்துறை செயலாளர் டி.உதயச் சந்திரன், மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.விழாவில், மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி கையேட்டை அமைச்சர் செங் கோட்டையன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:கல்வித்துறையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும்வகையில் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வித்துறை யில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு புதுமையான திட்டங்களை கொண்டுவந்தார். கடந்த 5 ஆண்டு களில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடியை ஒதுக்கியவர் ஜெய லலிதா. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கல்வித் துறைக்கு இவ்வளவு அதிக நிதிஒதுக்கப் பட்டது கிடையாது. கல்வியால் மட்டுமே ஏழ்மையை ஒழிக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 862 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தற்போது பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவ-மாணவிகள்கல்வி பயின்று வரு கிறார்கள். அவர்களில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேட்டை உருவாக்கி யுள்ளோம். மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும் வகையில் 262 பாடப் பிரிவுகளை கொடுத்துள்ளோம். சுமாராக படிக்கும் மாணவர்கள் என்னென்ன தொழிற்கல்வி படிப்பு களில் சேரலாம் என்ற விவரங் கள் இந்த கையேட்டில் இடம்பெற் றுள்ளன. புதிய படிப்புகளை படிக் கும்போது வேலைவாய்ப்பு பெரு கும். ஏழை மாணவர்கள் கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும்.பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 25 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க உள் ளோம். இது தொடர்பான அறி விப்பு பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது வெளியிடப் படும். இந்த ஸ்மார்ட் கார்டில் மாண வர்களின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, ரத்தப் பிரிவு, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.படிப்பில் மட்டுமின்றி உடல் நலன், பிறருக்கு உதவுவது, நாட்டுப் பற்று, சமூக சிந்தனை உள்ளிட்ட இதர விஷயங்களிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்காக பள்ளி களில் யோகா, நல்லொழுக்க வகுப்பு, சாலை பாதுகாப்பு விதிகள், பெற்றோரை நேசிப்பது, சமூக சிந் தனை ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும் வகையில் கல்வியில் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, “பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இத்தகைய முகாம்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களும் இந்த முகாம்களில் அளிக்கப்படும் வழிகாட்டுதல்களை மனதில்கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தலைமை தாங்கிப் பேசும்போது, “மாணவர்கள் எதிர் காலத்துக்கு பயனளிக்கும் கல் வியை கற்கவும் அவர்களின் கனவு களை நனவாக்கவும் மேற்கொள்ளப் படும் முயற்சிதான் இந்த வழிகாட்டி முகாம். இந்த திட்டத்துக்கு வித் திட்டவர் பள்ளிக்கல்வி அமைச்சர் தான்.

இது, மாணவர்கள் தங்களின் திறமைக்கேற்ப என்ன படிப்பை தேர்வுசெய்யலாம் என்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சியாகும். மாணவர் கள் இந்த முகாமை நல்ல முறை யில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.முன்னதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். நிறைவாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா நன்றி கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive