ஐதராபாத்தை சேர்ந்தவன் சிறுவன் அகஸ்தியா ஜெயிஸ்வால். 11 வயதே ஆன இவன்
யூசுப்குடா செயின்ட் மேரீஸ் ஜூனியர் கல்லூரியில் பிளஸ்–2 படித்து தேர்வு
எழுதி இருந்தான்.
நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அவன் 63 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான்.
இவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2015–ம் ஆண்டு தனது 9 வயதில் தேறி சாதனை படைத்தான்.
தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தமட்டில் 12–ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு வயது கட்டுப்பாடு இல்லை என்று இன்டர்மீடியட் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அகஸ்தியா ஜெயிஸ்வாலின் தந்தை அஷ்விணி குமார் தனது மகனின் அசாத்திய சாதனை குறித்து கூறுகையில், ‘‘11–வயதில் பிளஸ்–2 தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பது எனது மகன் மட்டும்தான். வேறு யாரும் இந்த மாநிலத்தில் இத்தகைய சாதனை படைத்தது இல்லை’’ என்று குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் டாக்டர் ஆவதுதான் எனது கனவு என்கிறான் அகஸ்தியா ஜெயிஸ்வால்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...