சமீபத்தில்
முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு,
'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல்
துவங்கியது. முதல் நாளில், விடைத்தாள்களை முதன்மை விடை திருத்துனர்கள்
திருத்தி, விடை குறிப்புகளை ஆய்வு செய்தனர்.
ஏப்.,
2 முதல், உதவி திருத்துனர்கள் மூலம் திருத்தம் நடக்கிறது. முந்தைய
ஆண்டுகளில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தமிழில் சரிவர
எழுத சிரமப்பட்டதும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில், தமிழில் திணறியதும்
தெரிந்தது. எனவே, மொழி பாடத்தில், 'சென்டம்' மதிப்பெண் வழங்க, கடும்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
'சென்டம்' வழங்க, பல கட்ட மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. உச்சகட்டமாக, இந்த ஆண்டு, 100 மதிப்பெண் வழங்கு வதையே, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது. அதாவது, விடைத்தாளில், இறுதி மதிப்பெண் வழங்கும் முகப்பு பக்க சீட்டில், 100 மதிப்பெண் இடுவதற்கான கட்டம் மாற்றப்பட்டு, 99 என்ற இரண்டு இலக்கம் எழுதும் வகையில், மாற்றப் பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில், புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற பாடங்களுக்கு, 100 என்று எழுதும் வகையில், மூன்று கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலத்திற்கு, 'சென்டம்' மதிப்பெண் இருக்காது, என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...