பிரின்டிங்
இல்லாமல், 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், அவற்றை பயன்படுத்த
முடியாத நிலை உள்ளது,'' என, சேலம் பாராமஹால் நாணய சங்க இயக்குனர், சுல்தான்
கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு, நவ., 8ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், சில்லரை தட்டுப்பாட்டை போக்க, 10 ரூபாய் நாணயங்களை, அதிகமாக வெளியிட்டது. அவற்றில், இந்திய ஸ்துாபி மட்டுமின்றி, அதன் மதிப்பு தொகை, அச்சிட்ட ஆண்டு ஆகிய குறிப்புகள் இல்லாமல் வெளியிடப்பட்டன. சிலவற்றில், எழுத்துகள் விரைவாக அழிந்துவிடும் வகையில் உள்ளன. இதற்கு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம். முன்னதாக வெளியிட்ட நாணயங்களில், அச்சு மற்றும் எழுத்து பிழைகள், நினைவு ஸ்துாபி, தேசிய தலைவர்கள் படம் சரிந்த நிலையிலும், ஒரு நாணயத்தில் இருமுறை அச்சிடப்பட்டும் வெளிவந்துள்ளன. ஆனால், முதல் முறையாக, நாணய மதிப்பு, நினைவு ஸ்துாபி, தலைவர்கள் படம், எழுத்துகள், அச்சிட்ட இடம் என, எதுவுமின்றி சில நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை, பல்வேறு வகையில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால், அந்த வகை நாணயங்கள் செல்லாது என அறிவித்து, அவற்றை திரும்பப் பெற, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...