ஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ("பான்')ஜூலை
1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை
பணப்பரிமாற்றத்தின் போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை
ஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார்.
எனவே, ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.இது
தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர்
தெரிவித்தார்.இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல்
நடைமுறைக்கு வருகிறது.
ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கவில்லை எனில், ஒவ்வொரு
பணப் பரிமாற்றத்தின்போது, நிரந்தர கணக்கு எண் இல்லை என்று பதிவாகும்.
நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை
கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.இதுதவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல்
பணபரிமாற்றம் செய்வது இணையம் மூலமாகவும், கணக்கு மூலமாகவும் செலுத்தலாம்.
இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...