மேஷம்
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக்
கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில்
சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். விருந்தினர்
வருகை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில்
சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மிதுனம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும்.
முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். விமர்சனங்களை கண்டு அஞ்ச
வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி
விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
கடகம்
குடும்பத்தினரை
அனுசரித்துப் போங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சகோதர வகையில்
அலைச்சல் இருக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன்
விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில
பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
கன்னி
எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். கல்யாண முயற்சிகள்
பலிதமாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
துலாம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புது நட்பு
மலரும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
விருச்சிகம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும்
இருக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். உங்கள்
மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம்
தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
தனுசு
பிள்ளைகள்
பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை
வெற்றியடையும்-. மனைவிவழியில் உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சரி
செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
மகரம்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கேட்ட இடத்தில்
உதவிகள் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு
உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக்
கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
கும்பம்
சவாலான
காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன்
நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில்
நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய
முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
மீனம்
நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதல்
அடைவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். திடீர் பயணங்கள்
உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் இழந்த
உரிமையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...