Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 17.3.17

மேஷம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். இரவு 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
மிதுனம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
கடகம்
நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
சிம்மம்
பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
கன்னி
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
துலாம்
இரவு 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
தனுசு
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகன வசதிப் பெருகும். சொந்த-பந்தங்கள் தேடி வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
மகரம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
கும்பம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சகோதரி ஒத்துழைப்பார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
மீனம்
இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive