தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் TET நிபந்தனை
ஆசிரியர்களுக்கு உதவ முன் வந்து அவர்களின் கோரிக்கையை தமிழக அரசின்
கவனத்தில் எடுத்து செல்கின்றன.
அவர்களின் கடிதங்களில்,
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்று மக்கள் மனதில் நல்ல நிலையில் நற்பெயர் கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறையின் புதிய கல்வி அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள
மதிப்பும் மேன்மையும் மிக்க திரு. செங்கோட்டையன் ஐயா அவர்களுக்கு TET
நிபந்தனை ஆசிரியர்களின் சார்பில் மனமுவந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
23/08/2010க்குப் பிறகு ஆசிரியப் பணி பெற்று பணியில் உள்ள அனைவருக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டி இந்த பதிவு.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில்
23/08/2010க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,
சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதை முறையே தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட வாரியாக பல சிக்கலான நிலைகள் ஏற்பட்டன.
காரணம் தமிழகத்தில் 15/11/2011 ல் தான் இது தொடர்பான அரசாணை வெளிவந்தது.
முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் வரை ஆசிரியர் பணி நியமனங்களிலில்
(TET கட்டாயம் பற்றிய அறிவிப்பு இல்லை) தமிழக அரசின் முறையான நடைமுறைகளின்
அடிப்படையில் அனைத்து வகை பள்ளிகளிலும் பணி நியமனங்கள் நடைபெற்றன.
(23/08/2010 முந்தைய தேதியிட்ட அன்றைய நடுவண் அரசின் அரசாணை அடிப்படையில்)
நாங்கள் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை பணிப் பாதுகாப்பு இன்றி
அரசின் சலுகைகள் அரைகுறையாக பெற்றும் வளரூதியம் ஊக்க ஊதியம் போன்ற
அடிப்படை பணப்பலன் கூட இல்லாத சூழலில் பணியில் உள்ளோம்.
காரணம் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வும் அதனைச் சார்ந்த நிபந்தனைகளும்.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டும்
எதிர் வரும் TNTET, எங்களின் இறுதி நாட்கள் அமைய வாய்ப்பு இருப்பதாக
அரசாணை எண் 181 கூறுவது மேலும் எங்களுக்கு வாழ்க்கை பற்றிய பயத்தை
தோற்றுவிக்கிறது.
சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக TET நிபந்தனைகளுடன் பணியில்
இருந்த எங்களுள் தற்போது 80% ஆசிரியர்களுக்கு முழுவதும் TET லிருந்து
விலக்கு கிடைத்து விட்டது.
(2010 மே மாதம் பதிவு மூப்பு மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி
நியமனம் பெற்ற 50-60% ஆசிரியர்கள், சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமனம்
பெற்ற 20-30% ஆசிரியர்கள் TNTET லிருந்து முழு விலக்கு பெற்றவர்கள் ஆவர்)
மீதமுள்ள (நாங்கள்) 20% ஆசிரியர்களில் பாதிபேர் கலப்பு திருமண
முன்னுரிமையிலும், விதவைகளும், இராணுவ வாரிசுகளும், தாழ்த்தப்பட்ட பழங்குடி
வகுப்பு இனத்தைச் சார்ந்த பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி
நியமனம் பெற்றவர்கள்.
கடைசியாக
மீதி மிக சொற்ப ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகங்களால்
பலகட்ட போட்டி/ தகுதி/ நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட
ஆசிரியர்களே.
கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நீதிமன்றம் வழக்குகள் காரணமாக TET தேர்வுகள் நடைபெறவில்லை.
எங்களுக்கான பணிப் பாதுகாப்புக்கான முழு வாய்ப்புகளும் பறிபோன
விரக்தியிலும் மன வருத்தங்களை வெளியே காட்டாமல் பள்ளிகளில் 100% சிறப்பாகவே
ஆசிரியர் பணியாற்றி வருகின்றோம்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள எங்களைப் போன்ற TET நிபந்தனை
ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.
எதிர் வரும் TNTET எங்கள் கடைசி வாய்ப்பு என மிரட்டப் படும் சூழலில் தள்ளப்பட்டு உள்ளோம்.
( எதிர்வரும் )TET தேர்வு அறிவிப்பு வந்துள்ள நிலையில் இதுவே கடைசி
வாய்ப்பு என மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக பெற்றுள்ள கடிதங்கள் மேலும்
சிக்கல்களை மனதளவில் அதிகமாகவே ஏற்படுத்தி உள்ளன.
தற்போதைய சூழலில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கும் TNTET எழுதுவதில்
பணியில் உள்ள எங்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்து பயில நடைமுறைச்
சிக்கல்கள் பல உள்ளன.
அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களின் திருப்புதல் , இதர
வகுப்புகளின் மாணாக்கர்களின் தேர்வு, நிறைவு CCE பணிகள், பணியிடைப்
பயிற்சிகள், கோடை சிறப்பு வகுப்புகள், அரசு SSLC பொதுத் தேர்வு பணி,
விடைத்தாள்கள் திருத்தம், உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி வகுப்புகள், தேர்தல்
பணிகள் போன்ற பல பணிகள் எதிர் வரும் இரண்டு மாதங்களில் எமக்கு சவாலாக அமைய
உள்ளது தாங்கள் அறிந்ததே.
எங்களுக்கு TET லிருந்து முழு விலக்கு அளிக்கும் பட்சத்தில் கல்விப்
பணியில் முழுவதும் எங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் மேலாக மாண்புமிகு
தமிழக முதல்வர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் எங்களின்
தலைமுறையே நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பது உண்மை.
எதிர் வரும் சட்டமன்ற கூட்டத்தில்
மிக குறைந்த அளவிலான TET நிபந்தனைகளுடன் பணிபுரியும் ஆசிரியர்களாகிய எங்கள்
வாழ்வு மற்றும் பணிப் பாதுகாப்பு, மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும்
மாண்புமிகு கல்வி அமைச்சர் ஆகிய உங்கள் கருணைக் கரங்களில் தான் உள்ளன.
சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு வழங்க உள்ளது போல
எங்களுக்கும் கோடை விடுமுறையில் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஆவண
செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.
எங்கள் வாழ்வாதாரம் தொடர்பான இந்த நிலையினை தாங்கள் சற்றே உள்ளார்ந்து
ஆராய்ந்து பார்த்து எங்கள் நிலையை சீர் தூக்கி பார்த்து, கவனத்தில் எடுத்து
(இந்த) சுமார் 1500 ஆசிரியர் குடும்பங்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை
எடுக்க கல்வித் துறை அமைச்சகம் மூலம் ஆவண செய்யுமாறு மிகவும்
பணிவன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறோம் - என கூறும்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் குரல்களாக பல்வேறு தமிழக ஆசிரியர் சங்கங்கள்
உதவ முன் வந்து உள்ளன.
Kandippaga nalla padhivu. Engal vazhķaiylae amaidhi undu pannungal. Engal thalaimuraiyae mudhalvar ayyavirtkum kalvi amaicharukkum kadamai pattu irukum.
ReplyDeleteEngal valvatharathai kathidungal. Mudhalvar MATRUM kalvi amaicharukkum Engal vaendukol KANNERUDAN.
ReplyDeleteTntet exam paniyil ullavargaluku villagu alika vendum nichayam kalvi amaichar nalla arivipinai velliyuduvar
ReplyDeleteTntet exam paniyil ullavargaluku villagu alika vendum nichayam kalvi amaichar nalla arivipinai velliyuduvar
ReplyDeleteதெளிவான பதில்அ ளிக்க வேண்டுகிறேன். ஒரே அறிவிப்பாணை ஐந்து கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு
ReplyDeleteஅறிவிப்பாணை தானே கணக்கில் கொள்ள வேண்டும் ...