தமிழக அரசு விரைவில் வழங்கப்பட உள்ள
ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியை காண துடிக்கும் நீங்கள், உடனடியாகவும்
தங்களது குடும்ப அட்டைக்கு கொடுத்துள்ள செல்பேசி எண்ணை பதிவு செய்து
விரைவில் வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுக்கான முகவரியினை
சரிபார்த்துக்கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் இப்போது புழக்கத்தில்
இருக்கும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக "ஸ்மார்ட் கார்டு' வடிவிலான
குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள்
நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாய்ன்ட் ஆப் சேல் (பிஓஎஸ்)
சாதனத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் தற்போது புழக்கத்தில்
இருக்கும் குடும்ப அட்டைககள் கடந்த 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்டவையாகும்.
இந்த குடும்ப அட்டைகள் 2009-ஆம் ஆண்டு வரை செல்லத்தக்கதாக இருந்த நிலையில்,
பின்னர் உள்தாள் ஒட்டப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், முறைகேட்டை தடுப்பதற்காக ரேஷன்
கடைகளில் நவீன கருவி மூலம் ஒரே நிறுவனம் மூலம் மேற்கொள்ள உணவு வழங்கல்
துறை முடிவு செய்தது. இதற்காக பாயிண்ட் ஆப் சேல் என்ற கருவியையும் அனைத்து
ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டன.
இதையடுத்து குடும்ப அட்டைகள் ஆதார்
விவரங்களுடன் கூடிய ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ வழங்க தமிழக அரசு அறிவித்து
பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக தமிழக முழுவதும் தங்களது குடும்ப
உறுப்பினர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய கட்டாயமாக்க உணவுத்துறை மூலம்
அறிவுறுத்தப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன.
முகவரியினை சரிபார்த்துக்கொள்ளும் முறை:
குடும்ப அட்டை (ரேசன் கார்டு) வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு. ஆதார் அட்டையில் உள்ள விலாசம் தான் ஸ்மார்ட் கார்டில் பதிவாகும். ஆதார் அட்டையில் உங்கள் வீட்டு விலாசம் தவறாக இருத்தால் ஸ்மார்ட் கார்டிலும் தவறாகதான் இருக்கும்.
குடும்ப அட்டை (ரேசன் கார்டு) வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு. ஆதார் அட்டையில் உள்ள விலாசம் தான் ஸ்மார்ட் கார்டில் பதிவாகும். ஆதார் அட்டையில் உங்கள் வீட்டு விலாசம் தவறாக இருத்தால் ஸ்மார்ட் கார்டிலும் தவறாகதான் இருக்கும்.
நீங்கள் தற்போது வசிக்கும் விலாசம்
ஸ்மார்ட் கார்டில் வர வேண்டும் என்றால் உடனே, www.tnpds.com என்ற
இனையதளத்தில் சென்று பயனாளர் நுழைவு இடத்தில கிளிக் செஞ்சா, உங்க செல்பேசி
எண் கேட்கும். ரேஷன் கடையில நீங்க கொடுத்த செல்பேசி எண்ணை அதில் பதிவு
செய்ததும் உங்க செல்பேசிக்கு ஒரு எண் வரும். அதனை பதிவு செஞ்சா உங்க
குடும்ப அட்டை குறித்த (ரேஷன் கார்டு) விவரம் வரும்.
அதில், விலாசம் என்ற இடத்த கிளிக் செஞ்சா
ஆதார் அட்டை விலாசம் அதில் இருக்கும். பக்கத்தில் புதிய விலாசம் பதிவு
செய்கின்ற வசதி இருக்கும். அதில், உங்க புதிய முகவரியை பதிவு செஞ்சா
வரப்போற ஸ்மாட் கார்டில உங்க புது முகவரி வரும்.
உடனே, உங்கள் முகவரியை சரிபார்த்து பயனடையுங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...