2009–ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான இலவச
மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 4 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு
இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி வழங்க வகை செய்கிறது. இந்த
சட்டத்தின்படி, அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கல்வி ஆணையம்
வகுத்துள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியை 2015–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்
பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த
நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் குறைந்தபட்ச
கல்வி தகுதியை பெறுவதற்கான கால அவகாசத்தை வருகிற 2019–ம் ஆண்டு மார்ச்
31–ந் தேதி வரை, மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்
அளிக்கப்பட்டது.
தமிழகத்தில்.......?
ReplyDeleteவிரைவில்........?