மத்திய
அரசு, குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சம் தரக்கூடிய, எல்.இ.டி., பல்பு
பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இதற்காக, பொதுத் துறையை சேர்ந்த தேசிய
அனல் மின் கழகம், 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் கிரிட்'
ஆகியவை இணைந்து, இ.இ.எஸ்.எல்., எனும் மின் சிக்கன சேவை நிறுவனத்தை
துவக்கியுள்ளன.இந்நிறுவனம், குறைந்த விலையில், எல்.இ.டி., பல்புகளை விற்பனை
செய்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில், 22 கோடி எல்.இ.டி., பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், இ.இ.எஸ்.எல்., நிறுவனம், மின் வாரியத்துடன் இணைந்து, எல்.இ.டி., பல்பு விற்க உள்ளது. அதன்படி, மின் கட்டண மையங்களுக்கு அருகில், நேற்று முதல் பல்பு விற்பனை, சோதனை ரீதியாக துவங்கியது.
இதுகுறித்து, மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிற மாநிலங்களில், மாநில மின் வாரியங்களே நேரடியாக, இ.இ.எஸ்.எல்., உடன் இணைந்து, எல்.இ.டி., பல்புகளை விற்கின்றன. தமிழகத்தில், மின் வாரியம், மின் கட்டண மையங்களுக்கு அருகில், 'ஸ்டால்' போட்டு, எல்.இ.டி., பல்பு விற்குமாறு, அந்நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மின் வாரியத்தின், 20 அலுவலகங்களில், சோதனை ரீதியாக பல்பு விற்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
'ஆதார்' அவசியம் : ஒன்பது வாட்ஸ் எல்.இ.டி., குண்டு பல்பு, 65 ரூபாய்; டியூப் லைட், 230 ரூபாய்; மின் விசிறி, 1,150 ரூபாய்க்கு விற்கப்படும். அதை வாங்க, 'ஆதார்' கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் நகல் ஒன்றை வழங்க வேண்டும். விரைவில், அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...