அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்காக சான்றிதழ்
சரிபார்த்த ல்ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகல் நடைபெறுகிறது.இந்த நியமனத்தில் அதிகாரிகள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சான்றிதழ் சரிபார்த்தல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர்பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து கடந்த 2015-ம் வருடம் மே மாதம் 31-ந்தேதி எழுத்து தேர்வை நடத்தியது. 1900 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் அனைவரும் எடுத்தமதிப்பெண்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது.
அதை அரசு தேர்வுகள் இணைய தளத்தில் காணலாம். மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒருவர் நியமனத்திற்கு 5 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
அழைக்கப்படுபவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையாக செய்யப்பட உள்ளது. ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி யாராவது பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம். அவ்வாறு மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வக உதவியாளர் நியமனத்தில் முதன்மை கல்வி அதிகாரி அல்லது யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
district wise weightage entry ku oru page create panalamey padasalai????
ReplyDeleteபோஸ்டிங் மாநில அளவிலா அல்லது மாவட்ட அளவிலா
ReplyDelete