இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (விஜிலென்ஸ்) இணையதளம், முடங்கியதாக
தகவல் வெளியாகின. குறிப்பாக, அதில் இருந்த அனைத்து தரவுகளும் அழிந்து
விட்டதாக கூறப்பட்டது. இதனால், அந்த துறையில் கடந்த நான்கு மாதங்களாகபணிகள்
நடப்பதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
குறிப்பாக, ஊழல்வாதிகள் பெயர் பட்டியல் அனைத்தும் அழிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில்,மும்பையைச் சேர்ந்த கோசியா என்பவர் ஆர்.டி.ஐ மூலம் ஜவுளித்துறைஅதிகாரி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்து இருந்தார். ஆனால், தொழில்நுட்ப கோளாறால் உங்களது புகார் மீது தற்போது நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்று விஜிலென்ஸ் அவருக்கு பதிலளித்தது. விஜிலென்ஸில் தரவுகளை கடந்த ஆண்டு வரை டி.சி.எஸ் (TCS) கண்காணித்து வந்தது. இதையடுத்து, அதனுடனான ஒப்பந்தம் முடிந்தபிறகு, இந்த ஆண்டு முதல் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre), விஜிலென்ஸின் தரவுகளை கண்காணித்து வருகிறது. இந்நிலையில், தரவுகள் அழிந்ததாக கூறுவதைவிஜிலென்ஸ் மறுத்துள்ளது. ''தொழில்நுட்ப கோளாறால் தரவுகளை எடுக்க முடியவில்லை. ஆனால், தரவுகள் எதுவும் அழியவில்லை'' என்று கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...