கடந்தாண்டு பொதுத்தேர்வில், மாணவர்கள்
மட்டம் போட்ட தேர்வுகளில், கணிதப்பாடம் முன்னிலை வகிக்கிறது.
நடப்பாண்டு
பொதுத்தேர்வில், பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காட்டை குறைக்கும், ஆப்சென்ட்
மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க, பள்ளிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,
கணித பாடத்திற்கான பொதுத்தேர்வு, நாளை (20ம் தேதி) நடக்கிறது. கோவை
மாவட்டத்தில், 421 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 44 ஆயிரத்து
121 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.இவர்களுக்கு, 101
மையங்களில், காலை 9:15 - மதியம் 12:00 மணி வரை தேர்வு நடக்கிறது. இதுவரை
நடந்து முடிந்த தமிழ் முதல், இரண்டாம் தாள் தேர்வுகளில், ஆயிரத்து 849 பேர்
ஆப்சென்ட் ஆகினர்.
இதேபோல், ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் தேர்வுகளில், ஆயிரத்து 894 பேர்,
பங்கேற்கவில்லை. கணிதப் பாடத்தேர்வில், மட்டம் போடும், மாணவர்களின்
எண்ணிக்கையை குறைக்க, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏனெனில், கடந்தாண்டு பொதுத்தேர்வில், கணித
பாடத்தில் மட்டும், ஆயிரத்து 23 பேர் பங்கேற்கவில்லை. மேலும், இப்பாடத்தில்
சென்டம் பெறுவோர் எண்ணிக்கையும், தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. கடந்த,
2014ல், ஆயிரத்து 662 பேரும், 2015ல், ஆயிரத்து 866 மாணவர்களும், கணக்கு
பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றனர்.
ஆனால், கடந்தாண்டில், ஆயிரத்து 413 பேர் மட்டுமே, சென்டம் பெற்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டில், கணித பாடத்திற்கு, மூன்று நாட்கள்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, புளூ பிரிண்ட் படி, பாடங்களை தேர்வு
செய்து பயிற்சி எடுத்தாலே, அதிக மதிப்பெண் பெறலாம் என, ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'பத்தாம் வகுப்பு தேர்வு தான், தரப்பட்டியலில் கல்வி குறியீட்டை,
முன்னுக்கு கொண்டுவரும். கடந்தாண்டு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்படி,
ஐந்தாம் இடம், பிளஸ் 2 தேர்வு முடிவுகள்படி, ஒன்பதாவது இடமும், கோவை
மாவட்டத்திற்கு அளிக்கப்பட்டது. நடப்பாண்டில், தனித்தேர்வர்களை விட, பள்ளி
மாணவர்களே அதிகளவில், 'ஆப்சென்ட்' ஆகின்றனர்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளில், மட்டம் போடும் மாணவர்களின்
எண்ணிக்கையை குறைப்பது அவசியம். இதற்காக, பாட ஆசிரியர்கள் கொண்டு,
கல்வியில் பின்தங்கிய மாணவர்களிடம் எடுத்துக்கூறி, தேர்வில் பங்கேற்க செய்ய
அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...