Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு ரூபாயில் மருத்துவ காப்பீடு... சபாஷ் போடுங்க! டூ தொழிலாளருக்கு "சூப்பர்' திட்டம்!!!

தினமும் ஒரு ரூபாய் செலுத்தி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ வசதி பெறும்வகையிலான சிறப்பு காப்பீடு திட்டத்தை ஏற்றுமதியாளர் சங்கத்தினர், நேற்று அறிமுகப்படுத்தினர்.

திருப்பூரில் உள்ள ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சிறப்பு
மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கான பொது காப்பீடு திட்டம் துவக்க விழா, ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.மூலப்பொருள் மொத்த கொள்முதல் கமிட்டி தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு, ஒரு ரூபாய் வீதம், ஆண்டுக்கு 365 ரூபாய் செலுத்தி, ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு பெறுவதற்காக, மும்பை எடல் வைஸ் புரோக்கிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறப்பு மருத்துவ காப்பீடு திட்டம், நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. மூலப்பொருள் கொள்முதல் கமிட்டி ஆலோசகர் ராமநாதன் மற்றும் சங்க நிர்வாகிகள், காப்பீடு நிறுவன பிரதிநிதிகள் இணைந்து, புதிய காப்பீடு திட்டத்தை வெளியிட்டனர்.இத்திட்டத்தில், தொழிலாளி மட்டுமின்றி, மனைவி, குழந்தைகள், பெற்றோர் என, குடும்ப அங்கத்தினரும் இணையலாம். குடும்பதாரர்கள் வேறு ஊரிலோ, வெளிமாநிலத்தில் இருந்தாலும், அங்கு மருத்துவ உதவி பெறமுடியும். இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்த மறுநாள் முதல், இதன் பயன்களை பெறலாம். ஏற்கனவே உள்ள உடல் பிரச்னைகளுக்கும், இத்திட்டத்தில் சிகிச்சை பெறமுடியும்.மருத்துவமனைக்கு செல்லும் பயனாளிகள், ஒரு லட்சம் ரூபாய் வரை, பணம் செலுத்தாமல், சிகிச்சை பெறமுடியும். ஆண்டுக்கு ஒருமுறை, தொழிலாளர்களுக்கு, மருத்துவ காப்பீடு நிறுவனம் வாயிலாக, இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.காப்பீடு செய்தவர், விபத்தினால் பணிக்கு செல்ல முடியாமலிருந்தால், வாரம் ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.நிறுவனங்களுக்கான காப்பீடு திட்டத்துக்கு, எடல் வைஸ் புரோக்கிங் நிறுவனம் மற்றும் திருப்பூரை சேர்ந்த ஷீல் இன்சூரன்ஸ், ஓம் மாருதி இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், அனைத்துவகை பாதிப்புகளுக்கும், இழப்பீடு பெறமுடியும்.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:ஆடை உற்பத்தி நிறுவன தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு ரூபாய் செலுத்தி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், சிறப்பு காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல், நிறுவனங்களுக்காக, தீ விபத்து, வெள்ளம், சரக்குகளை கொண்டுசெல்லும்போது ஏற்படும் சேதம் என, எல்லாவகை இழப்புகளுக்கும் பொதுவான காப்பீடு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.காப்பீடு திட்ட நிறுவனங்கள், திருப்பூர் தொழில் நிறுவனங்களுக்கு உகந்த காப்பீடு சரத்துக்களை பட்டியலிட்டு வைத்துள்ளன. ஆடை உற்பத்தி துறையினர், இவ்விவரங்களை பெற்று, தங்கள் தொழிலாளர்களை மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கவேண்டும்; தங்கள் நிறுவனங்களையும் காப்பீடு செய்துகொள்ள வேண்டும், என்றார்.சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மோகன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive