புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம்,
மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் இரு
மாணவர்கள், இடையே முன் பகை இருந்துள்ளது. இருவரும், 9ம் வகுப்பு
படிக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில்
காயமடைந்தவர் நலமாகி மீண்டும் பள்ளிக்கு வரத்தொடங்கினார். பின், இருவரும்
தொடர்ந்து நண்பர்களாக, பழகி வந்தனர்.
தற்போது, அதே பள்ளியில் இருவரும், பிளஸ் 2 படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பாடங்களில் சந்தேகம் கேட்க பள்ளிக்கு வரும்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. முன்பு பாதிக்கப்பட்டவன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சக மாணவனின் கழுத்து மற்றும் கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.அருகில் இருந்தவர்கள் காயமடைந்த மாணவனை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து, ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய மாணவனை தேடி வருகின்றனர்.
Government school must conduct moral classes and student counseling immediately to the all govt school. A separate student adviser also should be appointed.
ReplyDelete