‛வாட்ஸ் ஆப்‛ மூலம் அனுப்பப்படும் செய்திகள் ரகசியமானது என பலரும் நினைத்து
கொண்டிருக்கும் நிலையில், அந்த செய்தியை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.,
படிக்க முடியும் என விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட 8.761 பக்க அறிக்கை: ‛வாட்ஸ் ஆப்'பை ஹாக் செய்து செய்தியை படிக்கும் வசதி சி.ஐ.ஏ.,விடம் உள்ளது. தன்னிடம் உள்ள தொழில்நுட்பங்கள் மூலம், ‛வாட்ஸ் ஆப்', ‛டெலிகிராம்' உள்ளிட்ட செயலிகளை ஸ்மார்ட் போனை ஹாக் செய்து, அதில் உள்ள செய்திகள், ஆடியோ செய்திகள் 'என்கிரிப்சன்' செய்வதற்கு முன்னர் அவற்றை சி.ஐ.ஏ.,வால் பார்க்க முடியும். 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பப்படும் செய்திகளை உளவாளிகள் பார்க்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...