ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு பணி தீவிரமாக நடப்பதால், புதிய ரேஷன் கார்டு
வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் ரேஷன் கார்டுக்கு
பதிலாக 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கார்டுடன்
குடும்ப உறுப்பினர் ஆதார், அலைபேசி எண்கள் இணைக்கும் பணிகள் முழுவீச்சில்
நடந்து வருகிறது. ஆதார் எண்
இணைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது.
விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு : ஆதார் இணைக்காத ரேஷன் கார்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 20,000 முதல் 50,000 கார்டுகளுக்கு பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. அக்கார்டுதாரர்களில் சிலர் தற்போது மனுச்செய்து தங்கள் கார்டுகளுடன் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்துகின்றனர்.'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் மாவட்ட உணவு வழங்கல் அலுவலரின் 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி விடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.
புதிய கார்டு நிறுத்தம் : 'ஸ்மார்ட் கார்டு' பணி தீவிரமாக நடப்பதால், கடந்த மாதத்துடன் புதிய ரேஷன் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் புதிய ரேஷன் கார்டு பிரின்ட் செய்யும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது புதிய கார்டு கோரி 'ஆன்-லைனில்' மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி நிறைவடைந்த பின் பரிசீலனைக்குட்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கும் புதிய கார்டு வழங்கப்படும், என, வழங்கல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...