கென்டகி: அமெரிக்காவில் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்தியர்
ஒருவரை நியமித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். கென்டகி
மாகாணத்தின் கிழக்கு மாவட்ட நீதிபதியாக இந்திய- அமெரிக்கரான அமுல் தாப்பர்,47, 2007ம் ஆண்டு
நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக
தாப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப் பதவியேற்ற பிறகு நீதித் துறையில்
இந்தியருக்கு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.இந்த
நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கினால், தாப்பர்
அமெரிக்காவின் அதிகாரம் மிக்க 6-வது சர்க்யூட் மேல் முறையீட்டு
நீதிமன்றத்தின் ஒரு அங்கமாகி விடுவார். இவரது நியமனத்தை வடஅமெரிக்காவின்
தெற்கு ஆசிய வழக்கறிஞர்கள் சங்கம் வரவேற்றுஉள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...