நியூயார்க்: முழு உடல் வைப்ரேசன் சிகிச்சை மூலம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று புதிய ஒரு ஆய்வு கூறுகிறது.
முழுமையான உடல் அதிர்வு என இதை தமிழ்படுத்த முடியும். இதன்படி ஒரு நபர் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ, படுத்த நிலையிலோ சிகிச்சை பெற முடியும்.
இதற்கான மிஷின் மீது பாதிக்கப்பட்ட நபர்களை வைத்து, அதிர்வை ஏற்படுத்தி மேற்கூறிய நோய்களை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
Source: tamil.oneindia.com
மிஷின் அதிர்வடையும்போது, உடனிலுள்ள சக்திகள் உடல் எங்கும் பரவும். ஒவ்வொரு நொடியும் உடலின் பல பாகங்களையும் இந்த அதிர்வு இலகுவாக்கும்.
அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியிலுள்ள ஆகஸ்டா பல்கலைக்கழகத்தின் மேகன் இ.மெக்கீ-லாரன்ஸ்தான் இதை கண்டுபிடித்துள்ளார். எலும்புகளை சீரமைப்பதிலும் இது நல்ல பலன் தரும் என்று அவர் கூறுகிறார்.
இரு வகையான மனிதர்களை கொண்டு பேராசிரியர் குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதில் முழு உடல் அதிர்வு சிகிச்சை நல்ல பலனை கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
ட்ரெட் மில்லில் ஓடும்போதும் மனித உடலுக்கு ஓரளவுக்கு நல்ல அதிர்வுகள் கிடைப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உடல்பருமன் நோய் அதிகரித்துள்ள நிலையில் இந்த கண்டுபிடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இது ஒரு வகையில் மிகவும் இலகுவான வழி முறை என்பதால் இந்தியாவிலும் இதற்கான வரவேற்பு வருங்காலங்களில் அதிகரிக்கும் என்கிறார்கள் இங்குள்ள மருத்துவ நிபுணர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...